Tuesday, November 07, 2006

சில நேரங்களும் சில படங்களும்

அண்மையில் லிவிங் ஸ்மைலின் பதிவினை பார்த்த போது நம் ஊரிலும் 98 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை அரசின் பொருளாதார தடையால், மருந்து தடையால் செத்து போன ஏராளமான மனிதர்களின் ஞாபகம் வந்தது. இந்த படம் அதே வருடம் நவம்பர் மாதம் கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்து உலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.

இந்த படத்தை பெருமாள் கணேசன் என்னும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் எடுத்திருந்தார். படம் பிடிக்கப்பட்ட சிறிது நாட்களிலே அந்த குழந்தை இறந்து விட்டதாகவும், இடம்பெயர்ந்து வன்னியின் ஸ்கந்தபுரம் என்னும் இடத்தில் வசித்த குழந்தை அது எனவும் குறிப்பிட்டு இருந்தார். இலங்கை அரசின் இறுக்கமான செய்தி தணிக்கைக்கு மத்தியில் வெளியுலகத்தில் அந்த காலப்பகுதியில் வெளிவந்த ஒரே ஒரு புகைப்படம் இது.


இந்த படத்தை தான் அந்த காலப்பகுதியில் வெளிவந்த புத்தகங்கள், வெளியீடுகள், பத்திரிகைகள் எல்லாம் வெளியீட்டு இருந்தன.


இது கிழக்கு பல்கலைக்கழகம் வெளியிட்ட கலண்டர்.

கூடவே இன்னும் கொஞ்சப்படங்கள்.


3 comments:

Anonymous said...

மக்களின் கவனத்துக்குச் செல்லவேண்டிய படங்கள்.

பின்னூட்ட மட்டுறுத்தல் செய்துவிட்டபடியால், Word Verification ஐ எடுத்துவிடுங்கள். பின்னூட்டமளிக்கச் சிரமமாக இருக்கும்.

-மதி

Anonymous said...

மக்களின் கவனத்துக்குச் செல்லவேண்டிய படங்கள்.

பின்னூட்ட மட்டுறுத்தல் செய்துவிட்டபடியால், Word Verification ஐ எடுத்துவிடுங்கள். பின்னூட்டமளிக்கச் சிரமமாக இருக்கும்.

-மதி

Santhosh said...

யாரோ அந்நிய நாட்டு மக்களின் நிலையை பார்த்து கசிந்த மனது இந்த புகைப்படங்களை பார்த்து மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தது. இது போன்ற புகைப்படங்கள் வெளியே வந்தால் தாம் வெளிஉலகத்திற்கு இலங்கையின் உண்மைநிலை வெளியே தெரியவரும்.