Saturday, October 28, 2006

அவளும் நானும் (புகைப்படம்)

அது ஒரு அழகிய கிராமம்..இயற்கை வனப்பு காட்டியிருந்தாலும்....நகரங்களின் அதிநவீனம் அங்கு போய் இன்னும் சேரவில்லை..ஒரு நாள் காலையில் எனது கனோன் கமராவை தூக்கி கொண்டு அங்கு போனேன்..குளத்தில் இருந்து நீர் வரும் வாய்க்காலில் சில சிறுவர்களும் சிறுமியரும் குதித்து குதித்து நீராடிக் கொண்டு இருந்தனர். நான் கமராவை தூக்கியதும் அண்ணை என்னை எடுங்கோ...அண்ணை என்னை எடுங்கோ..என என்னை சுற்றி கொண்டு கமராவின் லென்ஸை பிடித்து கொள்ள அருகே வந்தனர். அவர்களை குளிக்கும் போது இயல்பாக எடுக்க முயற்சித்தும்..சரி வரவில்லை..அப்போது இந்த பெண் அமைதியாக வந்து "அண்ணை என்னை தங்கச்சியையும் ஒருக்கா எடுத்து விடுங்கோ" என்றாள்..அந்த படங்கள் தான் இது.



இடம் முத்துஐயன்கட்டு, வன்னி, ஈழம் (முத்துஐயன்கட்டு பற்றிய அறிய
  • (வசந்தனின் பதிவு)
  • நாள் 15-06-2005
    பொழுது மாலை 4.30

    6 comments:

    Thekkikattan|தெகா said...

    நிலவன்,

    அருமையான படங்கள். முதல் படத்தில் அந்த பெண் குழந்தைகளின் கண்களை பார்க்கும் பொழுது நீங்கள் கூறியபடி, நவீனத்தின் சுவடுகள் இன்னும் அந்த கிராமத்தில் கால் பதிக்கப்படவில்லை என்பது நன்றாகவே தெரிய வருகிறது.

    ஒரு முறை நேஷனல் ஜியோகிரஃபியில், எங்கே ஆஃப்கானிஸ்தானில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அந்த பத்திரிக்கையின் அட்டையில் வெளியிட்டிருந்தார்கள், அதே கண்கள் இங்கும் காணக்கிடைத்தது.

    இன்னும் படங்கள் எடுத்துப் போடுங்கள். முடிந்தால். நன்றி!

    தெகா.

    Anonymous said...

    அருமையான படங்கள்

    ஜூலியன் said...

    when I saw the first photo all what I remembered what thekkikattan wrote; the afgan girl. In 2002 the same photographer went back and took the then girl, now grown up woman again for National Geographic.

    The girl's eye in the first photo has a striking similarity with the afgan girl's photo.

    Old photo
    http://www.nationalgeographic.com/ngm/100best/storyA_story.html

    new photo
    http://magma.nationalgeographic.com/ngm/afghangirl/

    நிலவன் said...

    வருகைக்கும் தருகைக்கும் நன்றி தெற்காட்டான், காண்டீபன், யூலியன்.

    தெற்காட்டான் கூறிய படத்தை காண பார்க்க யோசித்தேன். உதவிய யூலியனுக்கு நன்றி. இன்னும் படங்களை இடுகின்றேன். அதற்கும் தங்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.

    வசந்தன்(Vasanthan) said...

    படங்கள் நல்லா வந்திருக்கு.
    நீர் முத்தையன்கட்டுப் பற்றியும் வன்னி பற்றியும் எடுத்துப்போட இன்னும் நிறையப் படங்களிருக்கு.

    துளசி கோபால் said...

    தலைப்பைப் பார்த்துட்டு எதோ சொந்த விவகாரமுன்னு போயிட்டேன்(-:

    அருமையான படங்கள்.


    இன்னும் இந்த வேர்டு வெரிஃபிகேஷன் வேணுமோ?